ஓம் என்பது விநாயக பெருமானை, இந்த உலகத்தை, பரபிரும்மத்தை குறிக்கும்,
ஆலயம் என்பது ஆன்மாக்கள் லயிக்கின்ற இடத்தை குறிக்கும், உண்மையில் ஆன்மாக்கள் லயிப்பது ஓம் என்ற பரபிரும்மத்தில் அல்லவா...? அதனாலும்,எனது அன்பில் எல்லா ஆத்மாக்களும் லயிக்க வேண்டும் என்பதாலும்,விரைவில் ஓமாலயா என்ற மிக பிரம்மாண்டமான விநாயகர் ஆலயத்தை எழுப்ப இருப்பதாலும், எப்போதும் என்னை தொடர்பு கொள்கிற எல்லா ஆத்மாக்களும் அந்த பரப்ரும்மத்தின் நினைவ்ளும் உயிர்கள் மீதான அன்பிலும் மூழ்கி இருக்கவேண்டும் என்பதாலும் எங்கள் யோகா மையத்திற்கு ஓமாலயா டிவைன் லவ் யோகா சென்டர்[ ஓமாலயா தெய்விக அன்பு யோகா மையம்] என்று பெயர் வைத்துள்ளோம்
ஓமாலயாவின் லட்சிய வாசகம்
உன்னதமான மந்திரம்
"ஏசு அல்லா ஹர ஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்"



Categories : 

0 comments:
Post a Comment